Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 22 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு, கம்ரான் அக்மலின் அதிரடி காரணமாக பெஷாவர் ஸல்மி தகுதிபெற்றுள்ளது.
லாகூரில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாவது வெளியேற்றப் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியை வென்றே இறுதிப் போட்டிக்கு பெஷாவர் ஸல்மி தகுதிபெற்றது.
மழை காரணமாக 16 ஓவர் கொண்டதாக நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பெஷாவர் ஷல்மி, 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கம்ரான் அக்மல் 77 (27), அன்றே பிளெட்சர் 34 (30), அணித்தலைவர் டரன் சமி 23 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரவி பொப்பாரா 3, தைமல் மில்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 171 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ், 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களையே பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜோ டென்லி ஆட்டமிழக்காமல் 79 (46), பாபர் அஸாம் 63 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சமீன் குல், ஹஸன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயனகாக கம்ரான் அக்மல் தெரிவானார்.
இந்நிலையில், கராச்சியில் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் இரவு 7.30க்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இஸ்லாமபாத் யுனைட்டெட் அணியை பெஷாவர் ஸல்மி அணி எதிர்கொள்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago