Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 24 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்ட லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது.
பிறிஸ்டல் சிற்றியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் முடிவில், 5-3 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற போட்டியின் 43ஆவது நிமிடத்தில் லெரோய் சனே பெற்ற கோலின் மூலமாக முன்னிலை பெற்றது.
பின்னர், போட்டியின் 49ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை மன்செஸ்டர் சிற்றி இரட்டிப்பாக்கிக் கொண்டது. எனினும் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் மார்லன் பக் தலையால் முட்டி பெற்றக் கோலின் மூலமும் போட்டியின் இறுதி நிமிடத்தில் அடென் பிளின்ட் பெற்ற கோல் மூலமும் கோல் எண்ணிக்கையை பிறிஸ்டல் சிற்றி சமப்படுத்தியது. எனினும் போட்டியின் இறுதிக் கணத்தில் கெவின் டி ப்ரூனே பெற்ற கோலின் மூலமாக 3-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago