Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷிய ஓபன் சுப்பர் சீரிஸ் பெட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பெயை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பெட்மின்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இங்கிலாந்து சாம்பியனான சென் யு பெயை (சீனா) எதிர்கொண்டார்.
46 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பெயை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ‘முதற்தர’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குக்கு (சீனதைபே) அதிர்ச்சி அளித்தார்.
இன்று நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள சிந்து, 4ஆம் நிலை வீராங்கனையான யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
யமாகுச்சிக்கு எதிராக இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள சிந்து அதில் 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago