Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யு.எப்.சி எனப்படும் கலப்பு வீரவிளையாட்டுப் போட்டியில், இலகுஎடைப் பிரிவுக்கான போட்டிகளில் அயர்லாந்தைச் சேர்ந்த சொனொர் மக்கிரேகர், 13 நிமிடங்களில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டம் வென்றார்.
பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் அல்டோவை வெற்றிகொண்டே, அவர் சம்பியன் பட்டம் வென்றார்.
ஐக்கிய அமெரிக்காவின் நெவேடாவில் இடம்பெற்ற இப்போட்டி, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
உலகின் முதல்நிலை வீரரும், நடப்புச் சம்பியனுமான அல்டோ, இப்போட்டியில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இத்தொடருக்கு முன்னதாக, இத்தொடரில் இலகுவாக வெற்றிபெறுவார் என அல்டோவுக்கு சாவல் வழங்கியிருந்த மக்கிரேகர், தனது சவாலை நிறைவேற்றிக் காட்டினார்.
ஆரம்பத்திலிருந்தே தாக்குதலாட்டத்தை மேற்கொண்ட அவர், வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago