2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலகுவாக இலங்கையை வென்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 24 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில்  எட்ஜ்பஸ்டனில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலகுவாக இலங்கையை வென்ற இங்கிலாந்து, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், தமது அணி முதலில்ந துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில்,  ஏழாவது இடத்தில் களமிறக்கப்பட்ட , முன்னாள் ஆரம்பத்ந துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 53, அஞ்செலோ மத்தியூஸ்  52, தினேஷ் சந்திமால் 44, குஷால் பெரேரா 37, தனுஷ்க குணதிலக 22 ஓட்டங்களைப் பெற்றனர்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில், அடில் ரஷீட், லியாம் பிளங்கெட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 255 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 34.1 ஓவர்களில் எதுவித விக்கெட் இழப்புமின்றி வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல்  6, ஆறு ஓட்டங்கள், 10, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 110 பந்துகளில் 133 ஓட்டங்களையும் ஜேசஸன் றோய் ஆட்டமிழக்காமல் 4, ஆறு ஓட்டங்கள், 7, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக  95 பந்துகளில் 112 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக ஜேஸன் றோய் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .