Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களையும் துடுப்பாட்ட வீரர்களையும், நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம், புகழ்ந்துள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, நாளை அதிகாலை 3 அணிக்கு (இலங்கை நேரப்படி) ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, டுனேடினில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட, துடுப்பாட்ட வீரர் குசால் பெரரா, தடை செய்யப்பட்ட மருந்துப் பாவனை காரணமாக, குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால், நியூசிலாந்து அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள் எனத் தெரிவித்த மக்கலம், அவர்களுக்கு அனுபவம் குறைவென்ற போதிலும், இலங்கை அணியில் மிக உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் ஓய்வின் பின்னர், இலங்கையின் துடுப்பாட்ட வரிசையில் அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அணியின் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால் இருவரையும், மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக அவர் இனங்கண்டார். அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸை அவர், உலகத்தரம்வாய்ந்த துடுப்பாட்ட வீரரென வர்ணித்தார்.
18 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
7 hours ago