2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை எதிர் நியூசிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் இலங்கை இன்னும் காணப்படுகையில் நியூசிலாந்துக்கு போராட்டத்தை இலங்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரின் பங்களிப்பு அவசியமாவதுடன், விஷ்வ பெர்ணாண்டோ, அசித பெர்ணாண்டோ, கசின் ராஜித உள்ளிட்டோர் நியூசிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவது அவசியமாகிறது.

மறுபக்கமாக நியூசிலாந்தானது இங்கிலாந்தை வீழ்த்தி நம்பிக்கையுடன் இருந்தாலும் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .