Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 23 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊதியக் குறைப்பை கடந்தாண்டு எதிர்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், தற்போது உறுதியான நிதியியலைக் கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து முன்னரை விட சற்று அதிகமாக ஊதியங்களை பெறவுள்ளனர்.
திறமை வெளிப்பாடு அடிப்படையிலான ஊதியத்தை கடந்தாண்டு இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், ஏறத்தாழ 30 சதவீதமான ஊதியக் குறைவை சில வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு 13.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடந்தாண்டு வருமானமாக பெற்றதைத் தொடர்ந்து, 34 சதவீத ஊதிய அதிகரிப்பை வழங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, 2018-19 பருவகாலத்துக்கான போட்டி ஊதியங்களையும் அதிகரிக்கவுள்ளது.
புதிய ஊதிய திட்டத்தின் கீழ், ஐந்து வெவ்வேறான வகைகளில் 33 முன்னணி வீரர்கள் ஒப்பந்தங்களை பெறுகின்றனர். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் தினேஷ் சந்திமால், சிரேஷ்ட வீரர்கள் ரங்கன ஹேரத், திமுத் கருணாரட்ண, சுரங்க லக்மால் ஆகியோர் பிரிவு ஏயில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு ஒப்பந்தப் பட்டியல்களில் இடம்பெற்ற லசித் மலிங்க இம்முறை இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு ஏ: அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், ரங்கன ஹேரத், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால்.
பிரிவு பி: உபுல் தரங்க, டில்ருவான் பெரேரா
பிரிவு சி: குசல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, திஸர பெரேரா
பிரிவு டி: அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, அசேல குணரட்ன, தனுஷ்க குணதிலக, நுவான் பிரதீப்
பிறீமியர் பிரிவு: சதீர சமரவிக்கிரம, றொஷேன் சில்வா, லஹிரு திரிமான்ன, லஹிரு கமகே, விஷ்வ பெர்ணான்டோ, லக்ஷன் சந்தகான், ஜெப்டி வன்டர்சே, தசுன் ஷானக, கெளஷால் சில்வா, ஷெகான் மதுஷங்க, லஹிரு குமார, மலிந்த புஷ்பகுமார, அமில அப்போன்ஸோ, வனிடு ஹசரங்க, இசுரு உதான, டில்ஷான் முனவீர.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago