2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு 390 ஓட்டங்கள் இலக்கு

Editorial   / 2023 ஜனவரி 15 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ஓட்டங்களை பெற்றுள்ளது.   

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடுவதற்கு முடிவு செய்தது.

இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து நிதான ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 15 ஓவர்களில் 91 ஓட்டங்களை சேர்த்த இந்த இணையை சாமிக்க கருணாரத்னே பிரித்தார். 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ரோஹித் ஷர்மா வெளியேறினார்.

இதையடுத்து களத்துக்கு வந்த விராட் கோலி, சுப்மன் கில்லுடன் கைகோத்து அணிக்கு பலம் சேர்த்தார்.

இருவரும் இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாப்புறமும் விரட்டியடிக்க சுப்மன் கில் 97 பந்துகளில் 116 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவருக்கு அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 38 ஓட்டங்களிலும், கே.எல்.ராகுல் 7 ஓட்டங்களிலும் விக்கெட்டாகினர். சூர்யகுமார் யாவத் 4 ஓட்டங்களில் கிளம்பினார். மற்றொருபுறம் விராட் கோலி நிலைத்து நின்று ஆடி 110 பந்துகளில் 166 ஓட்டங்களை சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 390 ஓட்டங்களை சேர்த்தது. விராட்கோலியும், அக்சர்படேலும் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் லஹீரு குமாரா, காசுன் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும், சாமிக்க கருணாரத்னே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X