Shanmugan Murugavel / 2025 ஜூன் 05 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழாமில் வேகப்பந்துவீச்சாளர்கள் எபொடொட் ஹொஸைன், காலிட் அஹ்மட், நஹிட் ரானா, சுழற்பந்துவீச்சாளர் ஹஸன் முராட், துடுப்பாட்டவீரர் லிட்டன் தாஸ் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
பங்களாதேஷ் இறுதியாகப் பங்கேற்ற டெஸ்ட் தொடரான சிம்பாப்வேக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்டவீரர் மஹ்முடுல் ஹஸன் ஜோய், சுழற்பந்துவீச்சாளர் தன்வீர் இஸ்லாம், வேகப்பந்துவீச்சாளர் தன்ஸிம் ஹஸன் சகிப் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), ஷட்மன் இஸ்லாம், அனமுல் ஹக் பிஜோய், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், மஹிடுல் இஸ்லாம், ஜாகிர் அலி, மெஹிடி ஹஸன் மிராஸ், தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன், ஹஸன் முராட், எபொடொட் ஹொஸைன், ஹஸன் மஹ்மூட், நஹிட் ரானா, காலிட் அஹ்மட்
2 hours ago
9 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Mar 2026