2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

இலங்கையும் ஓட்டக் குவிப்பில்

Editorial   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்டகொங்கில் நேற்று  ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளில் இலங்கையணியும் தமது முதலாவது இனிங்ஸில் ஓட்டங்களைக் குவித்து வருகிறது.

இன்றைய இரண்டாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், சகல விக்கெட்டுகளையும் இழந்து 513 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொமினுள் ஹக் 176, முஷ்பிக்கூர் ரஹீம் 92, மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 83, தமிம் இக்பால் 52 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3, லக்‌ஷன் சந்தகான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவருகின்ற இலங்கை, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், தனஞ்சய டி சில்வா 104, குசல் மென்டிஸ் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை மெஹெடி ஹஸன் மிராஸ் கைப்பற்றினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .