2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இவ்வருட ஐ.பி.எல்-இல் ஹர்ஷா போக்லே இல்லை

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வருட தொடரின் ஒளிபரப்பானது, உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பரிச்சயமான குரலொன்றை கொண்டிருக்கவில்லை.

அதாவது, எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து இந்திய கிரிக்கெட்டோடு இருந்து, இந்தியன் பிறீமியர் லீக்கின் 2008ஆம் ஆண்டு ஆரம்ப பருவகாலத்திலிருந்து வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்ஷா போக்லேயின் இந்தியன் பிறிமியர் லீக் ஒப்பந்தமானது, இவ்வருட இந்தியன் பிறிமியர் லீக் ஆரம்பமாக ஒரு வாரத்துக்கு முன் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வருட இந்தியன் பிறிமியர் லீக்கின் வீரர்களுக்கான ஏலத்தை ஹர்ஷா போக்லேயே தொகுத்து வழங்கியிருந்ததுடன், இவ்வருட இந்தியன் பிறிமியர் லீக்கின் விளம்பர காணொளிகளிலும் ஹர்ஷா போக்லே தோன்றியிருந்ததுடன் வர்ணனையாளர்களுக்கான 51 நாள் பணிப்பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிறிமியர் லீக்கின் தொலைக்காட்சி உரிமைகளை சொனி வலையமைப்பு கொண்டுள்ள போதும் தொடரின் தயாரிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாத்துச் சபையே கட்டுப்படுத்துகின்ற நிலையில், ஹர்ஷா போக்லே ஏன் நீக்கப்பட்டார் என்று இதுவரையில் எதுவித காரணமும் குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறெனினும் இந்திய வர்ணனையாளர்கள் இந்திய வீரர்களை பற்றியே அமிதாப் பச்சன் கூறியிருந்ததுடன், பின்னர், தான், சுனில் கவாஸ்கரையும் சஞ்சய் மஞ்சுரேக்கரையும் குறிப்பிடவில்லை என விளக்கமளித்த நிலையில், அது ஹர்ஷா போக்கேலேயை சுட்டியிருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .