Editorial / 2018 ஜனவரி 10 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் சிற்றியும் ஆர்சனலும் ஒப்பந்தமொன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஆர்சனலின் முன்கள வீரரான அலெக்ஸிஸ் சந்தேஸ், மன்செஸ்டர் சிற்றிக்குச் செல்வதை இவ்வாரயிறுதியில் பூர்த்தி செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிலி தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரரான அலெக்ஸிஸ் சந்தேஸின் ஆர்சனலுடனான ஒப்பந்தம் இப்பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில், 29 வயதான அலெக்ஸிஸ் சந்தேஸை புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைக்கும் முயற்சிகளை ஆர்சனல் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே, மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டிலோவுடன் இணைய அலெக்ஸிஸ் சந்தேஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பருவகால முடிவில் இலவசமாக செல்ல அனுமதிப்பதிலும் பார்க்க, தற்போது வீரர் பரிமாற்றக் கட்டணமொன்றை பெற ஆர்சனல் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago