Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மிலானோ கொர்டினா குளிர்கால ஒலிம்பிக் பதக்கங்களில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உடையைக் கூடியவனையாகக் காணப்படுகின்றன.
ஐக்கிய அமெரிக்க மலையிறக்க பனிச்சறுக்கு சம்பியனான பிறீஸி ஜோன்சன் சேதமடைந்த பதக்கத்தை அணிந்திருந்தமை உள்ளடங்கலான பிரச்சினைகள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக மிலானோ கோர்டினா ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் திங்கட்கிழமை (09) தெரிவித்துள்ளனர்.
பதக்கத்தின் மேலுள்ள பூச்சிலிருந்தே இப்பிரச்சினை ஏற்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகிறது.
நாட்டுக் குறுக்கேயான பனிச்சறுக்கு, றைபிள் சுடுதலை உள்ளடக்கிய ஜேர்மனிய பயத்தலெட் வீராங்கனை ஜஸ்டுஸ் ஸ்ரேலோவின் வெண்கலப் பதக்கமானது கொண்டாட்டத்தின்போது நிலத்தில் வெடித்திருந்தபடி வீழ்ந்து காணப்பட்டிருந்தது. இவ்வாறு சுவீடனின் நாட்டுக்கு குறுக்கேயான பனிச்சறுக்கு வீராங்கனை எப்பா அன்டர்சனின் வெள்ளிப் பதக்கமும் பனியில் வீழ்ந்து இரண்டாகியிருந்தது. ஐக்கிய அமெரிக்க பனி நடன வீராங்கனையான அலைஸா லியுவின் தங்கப் பதக்கத்திலிருந்து றிபன் கழன்றிருந்தது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago