Shanmugan Murugavel / 2016 ஜூன் 10 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லோர்ட்ஸில் இடம்பெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்துக்கு உறுதியான பதிலடியை வழங்கியுள்ளது.
தற்போது களத்தில், கௌஷால் சில்வா 79 ஓட்டங்களுடனும் குஷால் மென்டிஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முன்னதாக, திமுத் கருணாரட்ன 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஸ்டீவன ஃபின் வீழ்த்தியிருந்தார்.
முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில், இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜொனி பெயார்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 167 ஓட்டங்களையும் அலிஸ்டியர் குக் 85 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, ரங்கன ஹேரத் நான்கு விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் மூன்று விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் இரண்டு விக்கெட்டுகளையும் ஷமின்ட எரங்க ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago