2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

உலக இருபதுக்கு-20 தொடரில் ஆரொன் ஃபங்கிசோ

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 09 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆரொன் பங்கிசோ, உலக இருபதுக்கு-20 தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளார். அவரது பந்துவீச்சுச் சோதனையில், அவர் சித்தியடைந்துள்ளதைத் தொடர்ந்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் உள்ளூர் தொடரில் விளையாடும் போது, அவரது பந்துவீச்சுத் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அனுமதிக்கப்பட்ட 15 பாகைக்கும் அதிகமாக அவரது முழங்கை விரிவடைகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒரு வார காலத்துக்குக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமையன்று, பந்துவீச்சுச் சோதனை நடத்தப்பட்டது. இதில், அவரது எல்லாப் பந்துகளும் விதிக்கமைய இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உலக இருபதுக்கு-20 தொடரில் அவர் பங்குபற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .