2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

உலக இருபதுக்கு-20 வெற்றி: சமியின் பெயரில் விளையாட்டரங்கு

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிகொண்டுள்ள நிலையில், சென். லூசியாவிலுள்ள மைதானமொன்று, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமியின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. சென். லூசியாவிலுள்ள போசெஜூர் கிரிக்கெட் மைதானமே, டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கு எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உலக இருபதுக்கு-20 தொடரில், மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய சென். லூசியாவைச் சேர்ந்த வீரர்களான டெரன் சமி, ஜோன்சன் சார்ள்ஸ் இருவரையும் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றபோதே, டெரன் சமியின் பெயரில் விளையாட்டு மைதானமொன்று பெயரிடப்படும் விடயம் அறிவிக்கப்பட்டது. அத்தோடு, அதே மைதானத்தில் அரங்கொன்று, ஜோன்சன் சார்ள்ஸின் பெயரில் பெயரிடப்படவுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டெரன் சமி, 'நான் மிகவும் கௌரவமாக உணர்கிறேன். நான் கௌரவமடைவதோடு, ஆசிர்வதிக்கப்பட்டவனான உணர்கிறேன். நன்றி, சென். லூசியாவைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களை நேசிப்பார்கள் என நான் எப்போதும் அறிந்திருந்தேன். விமான நிலையத்தில் எனக்குக் கிடைக்கப்பெற்ற அன்பும் மதிக்கும் அபிமானமும்... கடவுளே, மிகவும் நன்றி" எனத் தெரிவித்தார்.

போசெஜூர் கிரிக்கெட் மைதானமே, மேற்கிந்தியத் தீவுகளில் பகலிரவு ஒருநாள் சர்வதேசப் போட்டியை நடத்திய முதல் மைதானம் என்பதோடு, இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகள், 26 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .