Shanmugan Murugavel / 2016 மார்ச் 07 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக மேசைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப்ஸ் தொடரில், சீனாவின் ஆண்கள், பெண்கள் அணிகள் மீதும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. அவ்விரு அணிகளுமே, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன.
53ஆவது தடவையாக இடம்பெற்ற இத்தொடர், மலேஷியாவின் கோலாலம்பூரில், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்து இடம்பெற்றன.இதில், ஆண்களுக்கான போட்டிகளில், ஜப்பானை எதிர்கொண்ட சீன அணி, 3-0 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டு, சம்பியனானது. இது, உலக மேசைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப்ஸ் தொடரில், தொடர்ச்சியாக 6ஆவது முறையாக, இறுதிப் போட்டியில் வைத்து ஜப்பானை, சீனா வெற்றிகொள்ளும் தடவையாகும்.
பெண்களுக்கான போட்டிகளிலும், ஜப்பானை எதிர்கொண்ட சீனா, 3-0 என்ற செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றுச் சம்பியன் பட்டம் வென்றது.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago