2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘உலகக் கிண்ணத்தை வெல்ல இறுதிச் சந்தர்ப்பம்’

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இவ்வாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா வெல்லாவிட்டால், உலகக் கிண்ணத்தை வெல்ல தனக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது என்றவாறான கருத்துகளை ஆர்ஜென்டீனாவின் முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி வெளிப்படுத்தியுள்ளார்.

பிரேஸிலில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணம், இரண்டு கோப்பா அமெரிக்கா என தொடர் என மூன்று பிரதான தொடர்களின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா மூன்றாண்டுகளில் தோற்றிருந்தது.

இந்நிலையில், ஈக்குவடோருடனான தமது இறுதி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் லியனல் மெஸ்ஸி பெற்ற மூன்று கோல்கள் காரணமாக குறித்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெற்றிருந்தது.

இவ்வாறாக லியனல் மெஸ்ஸியின் முக்கியத்துவம் ஆர்ஜென்டீனா அணியில் உணரப்படுகின்ற நிலையில், லியனல் மெஸ்ஸியும் அவரது சக வீரர்களும் ஆர்ஜென்டீன ஊடகங்களுடன் மோசமான உறவைக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த லியனல் மெஸ்ஸி, மூன்று இறுதிப் போட்டிகளுக்குச் சென்றபோதும் ஒன்றுமில்லை என உணரப்படுவதாக வீரர்கள் நினைக்கின்றனர் எனக் கூறியதுடன் நியாயமில்லாமல் விமர்சிக்கப்படுவதாக உணருவதாகத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த லியனல் மெஸ்ஸி, தாங்கள் உலகக் கிண்ணத்தை வெல்லா விட்டால் மேலும் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு, தாங்கள் மேலுமொரு சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கப் போவதில்லை என தாங்கள் நினைப்பதாகக் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் சிலியிடம் தோற்ற பின்னர் ஓய்வுபெற்றிருந்த லியனல் மெஸ்ஸி குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரே அணிக்குத் திரும்பியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .