2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: சம்பியனான அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஏப்ரல் 03 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா சம்பியனானது.

கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றே ஏழாவது தடவையாக அவுஸ்திரேலியா சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவி ஹீதர் நைட், அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அலைஸா ஹீலியின் 170 (138), றேச்சல் ஹெய்ன்ஸின் 68 (93), பெத் மூனியின் 62 (47) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில், அன்யா ஷெர்ஷோபிள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு, 357 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக, நட் ஷிவர் ஆட்டமிழக்காமல் 148 (121) ஓட்டங்களைப் பெற்றபோதும், 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களையே பெற்று 71 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், அலனா கிங், ஜெஸ் ஜொனாசென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மேகன் ஸ்கட் 2 விக்கெட்டுகளையும், தஹிலா மெக்ராத், அஷ்லெய் கார்ட்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகியாகவும், தொடரின் நாயகியாகவும் அலைஸா ஹீலி தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .