2025 ஜூலை 19, சனிக்கிழமை

எஞ்சியிருக்கும் போட்டிகளிலிருந்து டக்கெட் நிறுத்தம்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து லயன்ஸின் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் பென் டக்கெட் இடைநிறுத்தப்பட்டதோடு, அவரது நடத்தை தொடர்பாக எழுத்து மூலமாக இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இங்கிலாந்து லயன்ஸ் வீரரொருவருக்கு விதிக்கப்படக்கூடிய அதிகூடிய தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டமானது 1,500 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களாக இருக்கும் என நம்பப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்தின் உப தலைவரான ஜேம்ஸ் அன்டர்சன் மீது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, மதுபான விடுதியொன்றில் வைத்து மதுவை டக்கெட் ஊற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X