Shanmugan Murugavel / 2016 ஜனவரி 06 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, அண்மைய நாட்களாகப் போட்டிகளில் பங்குபற்றாத நிலையில், புத்துணர்ச்சியுடன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதன் காரணமாக, இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் காலத்தில், பூப்பந்தாட்டம் போன்ற ஏனைய விளையாட்டுக்களில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னரை விட மெலிந்த தோற்றத்தில் காணப்பட்ட டோணி, அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது, 'எனது உடல் தொடர்பாகவும் உடற்தகுதி தொடர்பாகவும், சிறிது திட்டமிடல்களில் ஈடுபட்டேன். நான் மெல்லியததாகத் தெரியலாம், ஆனால், இலகுஎடையில் இல்லை" என்றார்.
மேலும், 'கடந்த 15 வருடங்களாக, 86, 87, 88 கிலோ கிராமாகவே நான் இருந்துள்ளேன். எடையை நான் இழக்கவில்லை. நான் வெறுமனே, என்னை மெலிதாக்க முயன்றேன். அதைச் செய்வதில் நான் மகிழ்வாக இருந்தேன்" எனத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்காகத் தயாராகிவரும் டோணி, தனக்குக் கிடைத்த ஓய்வுக்காலம், புத்துணர்ச்சியுடன் போட்டிகளில் பங்குபற்ற உதவியதாகக் குறிப்பிட்டுள்ளர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago