2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

எட்டிலிருக்கும் ஆப்கான் வீரர்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 12 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரையும் வெற்றிகொண்டதோடு மாத்திரமல்லாமல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தரவரிசையின் 10ஆவது இடத்தையும் உறுதிப்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, இன்னுமொரு நற்செய்தியையும் பெற்றுள்ளது.

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலில், அவ்வணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷஷாத், 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளதோடு, பந்துவீச்சாளரான தவ்லட் ஸட்ரனும் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். தவிர, அவ்வணியின் சகலதுறை வீரரான மொஹமட் நபி, சகலதுறை வீரர்களின் பட்டியலில், 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

துடுப்பாட்டத்தில் ஆரொன் பின்ச் முதலிடத்தையும், விராத் கோலி, அலெக்ஸ் ஹேல்ஸ், பப் டு பிளெஸிஸ், கிறிஸ் கெயில், மார்ட்டின் கப்டில், பிரென்டன் மக்கலம், மொஹமட் ஷஷாத், குசால் பெரேரா, ஒய்ன் மோர்கன் ஆகியோர், முதல் 10 இடங்களில் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சில் சாமுவேல் பத்ரி, இரவிச்சந்திரன் அஷ்வின், சச்சித்திர சேனநாயக்க, ஷகிட் அப்ரிடி, மிற்சல் ஸ்டார்க், லசித் மலிங்க, இம்ரான் தாஹிர், தவ்லட் ஸட்ரன், நுவான் குலசேகர, ஷகிப் அல் ஹசன் ஆகியோர், முதல் 10 இடங்களில் காணப்படுகின்றனர்.

சகலதுறை வீரர்களில் ஷகிப் அல் ஹசன், ஷகிட் அப்ரிடி, ஷேன் வொற்சன், மொஹமட் ஹபீஸ், அஞ்சலோ மத்தியூஸ், மார்லன் சாமுவேல்ஸ், ஜே.பி டுமினி, டுவைன் பிராவோ, கிளென் மக்ஸ்வெல், மொஹமட் நபி ஆகியோர் முதல் 10 இடங்களில் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .