Gopikrishna Kanagalingam / 2015 நவம்பர் 05 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹாலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய அணி, ஓட்டமெதனையும் பெறாமல் முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டன. இறுதியில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
முரளி விஜய் 75, ரவீந்திர ஜடேஜா 38, செற்றேஸ்வர் புஜாரா 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டீன் எல்கர் 4, இம்ரான் தாஹிர் 2, வேர்ணன் பிலாந்தர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய நாள் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. டீல் எல்கரும் ஹஷிம் அம்லாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் காணப்படுகின்றனர்.
வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளை அஷ்வினும் ஜடேஜாவும் வீழ்த்தினர்.
5 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
2 hours ago