2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

எல் சல்வடோரின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் கொலை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல் சல்வடோர் தேசிய அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான அல்பிரடோ பச்சேக்கோ  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல் சல்வடோரின் தலைநகரான சன் சல்வடோரிலிருந்து மேற்காக 76 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சந்தா அனா நகரத்தில், 33 வயதான பச்சேக்கோவை பின் தொடர்ந்த நபர் ஒருவரே, பெற்றோல் நிலையம் ஒன்றில் வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் வேறு இருவரும் காயமடைந்ததாக தெரிவித்த பொலிஸார், எதற்காக இது மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

எல் சல்வடோர் சார்பாக அதிக போட்டிகளில் பங்கேற்ற பச்சேக்கோ, 2013ஆம் ஆண்டு போட்டி நிர்ணயம் காரணமாக ஆயுட்காலத் தடை பெற்றிருந்தார். இவர் உட்பட, தேசிய அணியின் இன்னொரு 13 பேர், 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரை போட்டிகளில் தோற்பதற்காக கையூட்டு பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது.

எல் சல்வடோர் அணிக்காக 86 போட்டிகளில் பச்சேக்கோ பங்கேற்றிருந்தார். இந்த மாத ஆரம்பத்தில் ஹொண்டுரஸின் தேசிய கால்பந்தாட்ட வீரரான ஆர்னால்ட் பெரால்டா, தனது சொந்த நகரத்தில் விடுமுறையில் இருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .