Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அவ்வணியின் பரமவைரியான றியல் மட்ரிட்டுக்குமிடையிலான எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
றியல் மட்ரிட் சார்பாக, பெடெரிக்கோ வல்வேர்டே, சேர்ஜியோ றாமோஸ், லூகா மோட்ரிட்ச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்சு பாட்டி பெற்றிருந்தார்.
இதேவேளை, செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஐபாருக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்தது. ஐபார் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிகே பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .