Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஜையன்ட்ஸுடனான போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் வென்றது.
மழை காரணமாக 14 ஓவர்களாக இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜையன்ட்ஸின் அணித்தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ், குசல் மென்டிஸின் 35 (17), பானுக ராஜபக்ஷவின் 33 (20), தனுஷ்க குணதிலகவின் 22 (12), மொஹமட் ஹஃபீஸின் 11 (06), இசுரு உதானவின் 13 (08) ஓட்டங்களோடு, 14 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் 3-0-20-3, ஜொஷ் லிட்டில் 3-0-29-2, தரிந்து ரத்னாயக்க 3-0-17-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 135 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜையன்ட்ஸ் சார்பாக, ஜனித் லியனனே 51 (37), பில் ஸோல்ட் 41 (29) , நஜிபுல்லா ஸட்ரான் 16 (09), சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 08 (03), சஷிந்த ஜயதிலகே ஆட்டமிழக்காமல் 05 (02) ஓட்டங்களைப் பெற்றபோதும் 14 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களையே பெற்று ஒன்பது ஓட்டங்களால் அவ்வணி தோல்வியடைந்தது. பந்துவீச்சில், சமித் பட்டேல் 3-0-24-2, இசுரு உதான 3-0-30-2, மொஹமட் ஆமிர் 3-1-24-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பட்டேல் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
23 minute ago
26 minute ago