Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்டி வொரியர்ஸ் உடனான போட்டியில் தம்புள்ள ஜையன்ட்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜையன்ட்ஸின் அணித்தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜையன்ட்ஸ், பில் சோல்ட்டின் 64 (27), நிரோஷன் டிக்வெல்லவின் 37 (23) ஓட்டங்களின் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றது.
பின்னர் விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஷானகவின் 24 (18), ரமேஷ் மென்டிஸின் ஆட்டமிழக்காத 22 (11) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், லஹிரு குமார 4-0-34-3, அல்-அமின் ஹொஸைன் 4-0-36-2, றொவ்மன் பவல் 2-0-12-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 191 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வொரியர்ஸ் சார்பாக றொவ்மன் பவல் 42 (21), சஷிந்து கொலம்பகே 27 (16) ஓட்டங்களைப் பெற்றபோதும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களையே பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ரமேஷ் மென்டிஸ் 4-0-21-3, நுவான் பிரதீப் 4-0-31-3, இம்ரான் தாஹீர் 4-0-28-1, நுவனிடு பெர்ணான்டோ 1-0-5-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பில் சோல்ட் தெரிவானார்.
59 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026