2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: ஸ்டார்ஸை வெளியேற்றிய ஜையன்ட்ஸ்

Editorial   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கிலிருந்து (எல்.பி.எல்) கொழும்பு ஸ்டார்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஹம்பந்தோட்டையில் நேற்று நடைபெற்ற தம்புள்ள ஜையன்ட்ஸுக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தே ஸ்டார்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்டார்ஸின் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்டார்ஸ், ஆரம்பத்திலேயே குஷல் பெரேராவை நுவான் பிரதீப்பிடம் இழந்தது. டொம் பன்டன் குறிப்பிட்ட நேரத்தில் ரண் அவுட்டானதுடன், தனஞ்சய டி சில்வாவும் சிறிது நேரத்தில் இம்ரான் தாஹீரிடம் வீழ்ந்தார். தொடர்ந்து பதும் நிஸங்கவும் 42 (39) ஓட்டங்களுடன் தாஹீரிடம் வீழ்ந்தார்.

பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 50 (34) ஓட்டங்களைப் பெற்ற நிலையில், சீக்குகே பிரசன்னா, தினேஷ் சந்திமால் ஆகியோர் பிரதீப், சாமிக கருணாரத்னவிடம் வீழ்ந்தனர். கரிம் ஜனட் ஆட்டமிழக்காமல் 11 (03) ஓட்டங்களைப் பெற 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை ஸ்டார்ஸ் பெற்றது. பிரதீப் 4-0-23-2, தாஹீர் 4-0-25-2, கருணாரத்ன 4-0-31-1, ஜொஷ் லிட்டில் 4-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 146 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜையன்ட்ஸ் ஆரம்பத்திலேயே அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்லவை துஷ்மந்த சமீரவிடம் இழந்ததோடு சிறிது நேரத்தில் சந்துன் வீரக்கொடியை பிரசன்னாவிடம் இழந்தது. பில் ஸோல்ட் அதிரடியாக 32 (21) ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஜெஃப்ரி வன்டர்சேயிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து ஜனித் லியனகேயின் ஆட்டமிழக்காத 56 (47), நஜிபுல்லா ஸட்ரானின் 34 (28) ஓட்டங்களோடு வெற்றியிலக்கை நெருங்கிய ஜையன்ட்ஸ், நவீன்-உல்-ஹக்கிடம் ஸட்ரான் வீழ்ந்தபோதும், கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 10 (05) ஓட்டங்களோடு 18.5 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், சமீர 4-0-24-1, நவீன்-உல்-ஹக் 4-0-26-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக லியனகே தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X