2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஏ.சி மிலன் முகாமையாளராக கட்டுஸோ

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலன், முகாமையாளர் வின்சென்ஸோ முன்டலாவை நீக்கியதோடு, அவரை ஜெனாரோ கட்டுஸோ மூலம் பிரதியீடு செய்துள்ளது.  ஏ.சி மிலனின் முன்னாள் மத்தியகள வீரரான ஜெனாரோ கட்டுஸோ, ஏ.சி மிலனின் இளம் அணியை முகாமை செய்ததிலிருந்தே தற்போது பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில், 20 புள்ளிகளுடன் ஏழாமிடத்திலிருக்கும் ஏ.சி மிலன், தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் நாப்போலியை விட 18 புள்ளிகள் குறைவாகவுள்ளது. இப்பருவகாலத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.சி மிலன், ஆறு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .