2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: 2ஆவது சுற்றில் நடப்புச் சம்பியன்

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நேற்றிரவு ஆரம்பித்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு நடப்புச் சம்பியனான நொவக் ஜோக்கோவிச் முன்னேறியுள்ளார்.

தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் றொபேர்ட்டோ கார்பல்லெஸ் பயெனாவை எதிர்கொண்டிருந்த உலகின் முதல்நிலைவீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றே இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகலை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் றொஜர் பெடரர், 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குண்ணேஸ்வரனை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரஷ்யாவின் டனியல் மெட்வெடெவ், 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் மார்கோ ட்ருன்கெலிட்டியை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகொரி, 6-1, 4-1 என்ற ரீதியில் முன்னிலையில் இருந்தபோது, போட்டியை மார்கோ ட்ருன்கெலிட்டி தொடர முடியாத நிலையில், இரண்டாவது சுற்றுக்கு கீ நிஷிகோரி தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் கஸக்ஸ்தானின் ஸரினா டியாஸை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சக செக் குடியரசின் டெரெஸா மார்டின்கோவாவை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 7-6 (8-6), 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் விட்னி ஒசுய்க்வேயை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஜப்பானின் மிஸாகி டொய்யை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸ் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .