2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனானார் நடால்

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்றுவந்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் சம்பியனானார்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற நான்கு மணித்தியாலங்கள் 50 நிமிடங்கள் வரை நீடித்த இறுதிப் போட்டியில் தற்போதைய உலகின் நான்காம்நிலை வீரரான ரஷ்யாவின் டானியல் மெட்வெடெவ்வை 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று தனது நான்காவது ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடர் பட்டத்தை ஸ்பெய்னின் நடால் பெற்றுக் கொண்டார்.

அந்தவகையில், அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களாக 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ள உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரின் அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையைச் சமப்படுத்துவதற்கு இன்னும் ஒரு கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையே 33 வயதான நடால் பெற வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .