Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நடப்புச் சம்பியனான நொவக் ஜோக்கோவிச் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வவ்றிங்காவை எதிர்கொண்டிருந்த உலகின் முதல்நிலைவீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 4-6, 5-7, 1-2 என்ற பின்தங்கியிருந்தபோது தோட்பட்டை காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியிருந்தார்.
இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் பெல்ஜியத்தின் டியகோ கொபினை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-2, 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியின் டொமினிக் கொயெப்ஃபரை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரஷ்யாவின் டானியல் மெட்வடெவ், 3-6, 6-3, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் சீனாவின் குவாங் வாங்கை எதிர்கொண்டிருந்த உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 2-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டாவை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 7-6 (7-1), 3-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் உலகின் ஒன்பதாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸை எதிர்கொண்டிருந்த உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் குரோஷியாவின் பெட்றா மார்டிச்சை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
22 minute ago
24 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
35 minute ago