Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அத்தொடருக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் அணிகளை, அச்சபை அறிவித்துள்ளது. ஆண்கள், பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணிகளில், இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு இடம்கிடைக்கவில்லை.
ஆண்கள் அணியின் தலைவராக விராத் கோலியும் பெண்கள் அணியின் தலைவியாக மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டபானி டெய்லரும் தெரிவாகினர்.
ஆண்களுக்கான குழாமில் இங்கிலாந்து வீரர்கள் நால்வரும் மேற்கிந்திய, இந்திய வீரர்கள் தலா இருவரும் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் தெரிவாகியுள்ளனர்.
அணி: ஜேஸன் றோய், குயின்டன் டீ கொக், விராத் கோலி (தலைவர்), ஜோ றூட், ஜொஸ் பட்லர், ஷேன் வொற்சன், அன்ட்ரே றசல், மிற்சல் சான்ட்னெர், டேவிட் வில்லி, சாமுவேல் பத்ரி, ஆஷிஷ் நெஹ்ரா. 12ஆவது வீரர் - முஸ்தபிகூர் ரஹ்மான்
பெண்களுக்கான குழாமில் நியூசிலாந்தைச் சேர்ந்த வீராங்கனைகள் நால்வரும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த தலா இருவரும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தெரிவாகினர்.
அணி: சுஸி பேற்ஸ், சார்ளட் எட்வேர்ட்ஸ், மெக் லனிங், ஸ்டபானி டெய்லர், சோபி டெவின், றாஷெல் பிறீஸ்ட், டேன்ட்ரா டொட்டின், மேகன் ஷ_ட், சுனே லூஸ், லெய் கஸ்பெரெக், அனியா ஷ்ரப்சோல். 12ஆவது வீராங்கனை - அனம் அமின்
6 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
23 minute ago