Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தில் இலங்கையின் குசல் பெரேரா, டுனித் வெல்லலாகே, பினுர பெர்ணாண்டோ, ட்ரவீன் மத்தியூ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட 1,390 வீரர்களில் இருந்து 350 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் குயின்டன் டி கொக்கும் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெறவுள்ள ஏலத்தில் அவுஸ்திரேலியாவின் கமரன் கிறீனைக் கைச்சாத்திட போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் 64.30 கோடி இந்திய ரூபாய்களையும், சென்னை சுப்பர் கிங்ஸ் 43.40 கோடி இந்திய ரூபாய்களையும் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டு வீரர்கள் 31 பேர் உள்ளடங்கலாக 77 இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025