Shanmugan Murugavel / 2025 ஜூன் 02 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
அஹமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வென்றே இறுதிப் போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை, சூரியகுமார் யாதவ்வின் 44 (26), திலக் வர்மாவின் 44 (29), ஜொனி பெயார்ஸ்டோவின் 38 (24), நாமன் திர்ரின் 37 (18) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கைல் ஜேமிஸன் 4-0-30-1, யுஸ்வேந்திர சஹால் 4-0-39-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 204 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 87 (41), நெஹால் வதேராவின் 48 (29), ஜொஷ் இங்லிஸின் 38 (21), பிரியன்ஷ் ஆர்யாவின் 20 (10) ஓட்டங்களோடு 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் மிற்செல் சான்ட்னெர் 2-0-15-0, ட்ரெண்ட் போல்ட் 4-0-38-1, ஹர்திக் பாண்டியா 2-0-19-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஐயர் தெரிவானார்.
46 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
27 Mar 2026