Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், திலக் வர்மா 84 (46) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கரண் ஷர்மா 4-0-32-2, மொஹமட் சிராஜ் 4-0-21-1, றீஸ் டொப்லி 2-0-14-1, மிஷெல் பிறேஸ்வெல் 2-0-16-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 (49), அணித்தலைவர் பப் டு பிளெஸி 73 (43), கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 12 (03) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பியூஷ் சாவ்லா 4-0-26-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக டு பிளெஸி தெரிவானார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026