Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 27 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டி 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குமிடையே நடைபெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடந்து வருவதால் பல வீரர்கள் இம்முறை தமது முதலாவது போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகங்கள் தமது வீரர்களை ஐபிஎல் இல் பங்குபற்ற இன்னும் விடுவிக்காதது தொடர்பில் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளதுடன் அடுத்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் இவ்விரண்டு அணி வீரர்களுக்கும் தடை விதிப்பது தொடர்பிலும் பிசிசிஐ கவனம் செலுத்துகிறது.
நியூசிலாந்துடனான ஒருநாள் போட்டிகள் மார்ச் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இலங்கை அணி வீரர்களும் முதலாவது ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
வீரர்கள் பகுதிநேர அடிப்படையில் போட்டியில் கலந்து கொள்வதாயின் உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025