Editorial / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி இன்று மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றுள்ளபோதும் ஒருநாள் போட்டித் தொடர் போட்டித் தன்மையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரில் வெல்லும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 11ஆவது இடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தான், 10ஆவது இடத்திலிருக்கும் சிம்பாப்வேயைப் பின்தள்ளி 10ஆம் இடத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
37 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
5 hours ago