Shanmugan Murugavel / 2021 ஜூன் 17 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி வருகின்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவி ஹீதர் நைட், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், ஹீதர் நைட்டின் 95, தம்மி பியூமெளன்டின் 66, நட் ஷிவரின் 42, லோரன் வின்ஃபீல்ட்-ஹில்லின் 35 ஓட்டங்கள் மூலம் பலமான நிலையை இங்கிலாந்து அடைந்தபோதும், இறுதி நேரத்தில் ஸ்னே ரானாவிடம் 3, தீப்தி ஷர்மாவிடம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நேற்றைய முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 269 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றிருந்தது. சோபியா டங்க்ளே 12, கதரின் பிரண்ட் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்துவீச்சில், பூஜா வஸ்ட்ராகரும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
5 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
2 hours ago