Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த விரும்பும் லொஸ் ஏஞ்சலஸ், அதற்கான இலட்சினையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அப்போட்டிகளை நடத்துவதற்கான பிரசாரம், இன்னமும் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலட்சினைக்கு மேலதிகமாக, 'சூரியனைப் பின்தொடருங்கள்" எனப்படும் மேற்கோள் வாசகத்தையும், அந்நகரத்தின் ஒலிம்பிக் ஏலச் செயற்குழு வெளியிட்டுள்ளது.
'ஒவ்வொரு நாளும் மக்கள், தங்களுடைய கனவுகளை நோக்கிச் செல்வதற்காக, சூரியனைப் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம், இதற்கு முன்னெரெப்போதுமில்லாத அளவுக்கு புத்தாக்கமும் புதுமையும் முன்னேற்றமும் ஏற்படுகிறது" என, லொஸ் ஏஞ்சலஸ் செயற்குழுவின் தலைவர் காசே வஸ்ஸர்மான் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கு, புடாபெஸ்ட் (ஹங்கேரி), பரிஸ் (பிரான்ஸ்), றோம் (இத்தாலி), லொஸ் ஏஞ்சலஸ் (அமெரிக்கா) ஆகிய நான்கு நகரங்கள், இதுவரை தங்கள் போட்டித்தன்மையை அறிவித்துள்ளன. ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர், போட்டிக்கான மேலதிக விவரங்கள் வழங்கப்படும் என்பதோடு, அதன் பின்னர், ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்த நகரங்களுக்கு விஜயம் மேற்கொள்வர். இறுதியில், செப்டெம்பர் 13, 2017இல், போட்டியை நடத்துவதைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago