Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், நீர் விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமானதான படகோட்டப் போட்டிகளுக்கான நீர்ப்பகுதிகளில், நீரின் தரம் இன்னமும் அதிகரிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், பிரேசிலின் றியோ டி ஜெனீரோவில் இடம்பெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இடம்பெறவுள்ள 10 படகோட்ட நிகழ்வுகளில் 7 நிகழ்வுகள், மரினா டி குளோரியாவில் இடம்பெறவுள்ளன. இங்கேயே, அதிகளவிலான நுண்ணுயிர்கள் காணப்படுவதாகவும், உடல்நலத்துக்குக் கேடான நிலை காணப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
'மரினா பகுதி தான், எமது மிகப்பெரிய சவால். அது பூர்த்தி செய்யப்பட்டு, வித்தியாசத்தை நாம் பார்ப்பதென்பது அவசியமானது" என, உலக படகோட்ட நிகழ்வுகளின் தலைவர் அலஸ்டெயர் பொக்ஸ் தெரிவித்தார்.
'சுகாதார நோக்கிலும், விளையாட்டின் காட்சிப்படுத்தல் நோக்கிலும், இது முன்னேறுவதென்பது அவசியமானது" என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள நீர்நிலைகளில் காணப்படும் சில பக்டீரியாக்கள், தடுப்பு மருந்தால் நிறுத்தப்பட முடியாதவை என வைத்தியர்கள் தெரிவிக்கின்ற நிலையில், இவற்றின் முன்னேற்றமென்பது அவசியமானது எனக் கருதப்படுகிறது.
குறிப்பாக, குவான்பாரா குடாவில், நுண்ணுயிர்கள் மாத்திரமன்றி, மரத்தளவாடங்கள், பொலித்தீன்கள், இறப்பர்கள், ஏனைய கழிவுகளும் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago