Shanmugan Murugavel / 2016 ஜூலை 03 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஒஸ்திரியன் கிரான்ட் பிறிக்ஸ் போட்டிகளில், மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹமில்ட்டன் வெற்றிபெற்றார். தனது சக மெர்சிடிஸ் வீரரும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளவருமான நிக் றொஸ்பேர்க்குடன் மோதியமைக்கு மத்தியிலேயே, அவருக்கு இந்த வெற்றி கிடைத்தது.
இதற்கு முன்னர் இடம்பெற்ற 2 கிரான்ட் பிறிக்ஸ் போட்டிகளிலும் வெற்றிபெற்று, 3ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பெறும் நோக்கில் களமிறங்கிய றொஸ்பேர்க்கின் கனவு, இதன் மூலம் நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியின் இரண்டாவது திருப்பத்தில், ஹமில்ட்டனின் காரை நோக்கி றோஸ்பேர்க்கின் கார் சென்று, இடித்தது. இதன் காரணமாக, அவரது கார் தடத்தை விட்டு வெளியேற்றப்பட்டது. பின்னர் ஹமில்ட்டன் இணைந்த போதும், ஹமில்ட்டனதும் றோஸ்பேர்க்கினதும் கார்கள் மோதிக் கொண்டன. ஆனால் இறுதியில், ஹமில்ட்டனுக்கு வெற்றி கிடைத்தது. போட்டியின் இறுதிச் சுற்றை முதலிடத்தில் ஆரம்பித்த றொஸ்பேர்க்குக்கு, நான்காவது இடமே கிடைத்தது.
இந்தப் போட்டியின் முடிவில், ஒட்டுமொத்தப் புள்ளிகளின்படி, முதலிடத்தில் உள்ள றொஸ்பேர்க்குக்கு 153 புள்ளிகளும் ஹமில்ட்டனுக்கு 142 புள்ளிகளும் காணப்படுகின்றன.
போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த றொஸ்பேர்க், போட்டியில் ஹமில்ட்டன் தவறாக நடந்துகொண்டார் எனக் குற்றஞ்சாட்டினார். ஆனால், தனது வெற்றி, நியாயமானது என, ஹமில்ட்டன் பதிலடி வழங்கினார். போட்டியின் முடிவில் போட்டியின் மீள் ஒளிபரப்பைப் பார்வையிட்ட போட்டியின் கண்காணிப்பாளர்கள், ஹமில்ட்டனின் கூற்றில் நியாயமிருப்பதை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, வாகனமோடுவதற்கான போதுமான இடத்தை ஹமில்ட்டனுக்கு வழங்காமைக்காக, றொஸ்பேர்க்குக்குக் கண்டனம் வெளியிட்ட அவர்கள், அவருக்கு 10 செக்கன்கள் அபராதமும், வாகனமோட்டும் அனுமதியிலிருந்து 2 புள்ளிகளையும் கழித்தனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago