Shanmugan Murugavel / 2021 மே 18 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஏ.பி டி வில்லியர்ஸின் ஓய்வு இறுதியானதாக இருக்கும் என அவர் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இவ்வாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் டி வில்லியர்ஸ் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன.
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ், கழகங்களுக்காக இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடி வருகின்றார்.
இந்நிலையில், உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது குறித்து தென்னாபிரிக்கப் பயிற்சியாளர் மார்க் பெளச்சருடன் கலந்துரையாடல்களில் டி வில்லியர்ஸ் இருப்பதாக, கடந்த மாதம் அவர் இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்கும்போது தகவல் வெளியாகியிருந்தது.
அந்தவகையில், டி வில்லியர்ஸுடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்து விட்டதாக இன்று வெளியீடொன்றில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026