Shanmugan Murugavel / 2016 ஜூன் 16 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தெரிவு செய்வதற்கு காணொளி வசதி மூலமாக வெளிநாட்டிலிருந்து சச்சின் டென்டுல்கர் உதவவுள்ளார். சச்சினுடன் இணைந்து, சௌரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோரும் பயிற்சியாளர் தெரிவுக்கு உதவவுள்ளனர்.
பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பங்களை 21 ஆக குறைத்த இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் அஜய் ஷிர்கே, இந்த 21 விண்ணப்பங்களிலிருந்து, சச்சின், கங்குலி, லக்ஸ்மன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் விவகாரங்களுக்கான செயற்குழு, பயிற்சியாளரை தெரிவு செய்து பரிந்துரையை வழக்கும் எனத் தெரிவித்திருந்தார். பயிற்சியாளரை தெரிவு செய்வதற்கான நடைமுறையின்போது, பிரதான ஒருங்கிணைப்பாளராக, இந்திய கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜகத்லே செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தற்போது இந்தியாவுக்கு வெளியேயுள்ள சச்சின், தனது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தேவைப்படும் நேரத்தில், காணொளி வசதி மூலமாக பங்கேற்பார் என இந்திய கிரிக்கெட் சபையின் வெளியீடு ஒன்று தெரிவித்துள்ளது.
மேற்கூறப்பட்ட செயற்குழுவுக்கு, பயிற்சியாளரை தெரிவு செய்வதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு குறைவான காலமே இருக்கின்ற நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி, தனது பரிந்துரையை செயற்குழு மேற்கொள்ளும் எனவும், அதன்பின்னர் குறித்த தெரிவானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த செயற்குழு விரும்பினால், 57 பேரின் விண்ணப்பங்களையும் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணபித்தோரின் பெயர்கள் இதுவரையில் வெளியிடப்பட்டிருக்காத போதும், இந்திய அணியின் முன்னாள் பணிப்பாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ளே, இந்திய அணியின் தற்போதைய தலைமைத் தேர்வாளர் சந்தீப் பட்டேல், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லோ ஆகியோர் தாம் விண்ணபித்ததை உறுதிப்படுத்தியிருந்தனர்.
விண்ணபிப்பதுக்கான தகுதியாக, சர்வதேச அல்லது முதற்தர அணிக்கு பயிற்சியளித்திருக்க வேண்டும், எந்தவொரு டெஸ்ட் அங்கத்துவம் பெற்ற நாடுகளின் சான்றிதழ் நடைமுறையூடாக தகுதி பெற்றிப்பது விரும்பத்தக்கது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த முக்கியமான இரு தகுதிகளையும் கும்ளே கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago