2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கோப்பா அமெரிக்கா: காலிறுதிக்குத் தகுதி பெற்றது சிலி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 15 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் தென்னமரிக்க நாடுகளுக்கிடையே இடம்பெற்றுவரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சிலி தகுதி பெற்றுள்ளது.

தற்போதைய கோப்பா அமெரிக்கா சம்பியன்களான சிலி, பனாமா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் தோல்வியடைந்தால், குழுநிலைப் போட்டியுடன் சிலி வெளியேறும் என்றும் நிலையில், எடுவாரோ வர்காஸ், அலெக்சிஸ் சந்தேஸ் ஆகியோர் பெற்ற தலா இரண்டு கோல்களினால், 4-2 என்ற கோல்கணக்கில் பனாமைவை வென்ற சிலி, தமது குழுவிலிருந்து இரண்டாவது அணியாக காலிறுதிக்குள் நுழைந்தது.

இதேவேளை, மேற்படிக் குழுவிலிருந்து ஏற்கெனவே காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆர்ஜென்டீனா அணி, தனது இறுதி குழுநிலைப் போட்டியில், பொலிவியாவைச் சந்தித்திருந்த நிலையில், போட்டியின் முதற்பாதியில், எரிக் லமேலா, எஸ்குயில் லவேஸ்ஸி, விக்டர் கியூஸ்டா பெற்ற கோல்களின் காரணமாக, 3-0 என்ற கோல்கணக்கில் பொலிவியாவை ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியின் இரண்டாவது பாதியில், நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி விளையாடியிருந்த போதும், அவர் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .