2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் வீரர்களுக்கான ஒப்பந்தங்கள்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 01 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016-17 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் வீரர்களுக்கான ஒப்பந்தங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்டதாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதாகவே அமைந்தது. கடந்த வருடம் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட குழுவிலிருந்து, ஓய்வு பெற்ற மைக்கல் கிளார்க், ஷேன் வொற்சன், பிராட் ஹடின், மிட்செல் ஜோன்சன், றயான் ஹரிஸ், கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரே இடம்பெற்றிருக்கவில்லை.

கடந்த வருட ஆரம்ப கட்ட குழுவிலிருந்து பீற்றர் சிடில், உஸ்மான் கவாஜா, ஜோ பேர்ண்ஸ், அடம் வொஜஸ், பீற்றர் நெவில், ஜோன் ஹேஸ்டிங்கஸ், நேதன் கூல்டர்-நைல் ஆகியோர் இம்முறை உள்வாங்கப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும் இவர்கள் ஏழு பேரும் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஒப்பந்தத்துக்கு இற்றைப்படுத்தும் அளவுக்கு 2015-16இல் போட்டிகளில் விளையாடி இருந்தார்கள்.

மேற்கூறியவாறு 2015-16 இல் போதுமானளவு போட்டிகளில் விளையாடியும் மத்தியூ வேட், ஸ்கொட் போலண்ட் ஆகியோர் இம்முறை ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இவர்கள் இருவரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜக்ஸன் பேர்ட், ஸ்டீவ் ஓ’கெவியும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடிய அடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

ஒப்பந்த வீரர்கள்- ஜோர்ஜ் பெய்லி, ஜோ பேர்ண்ஸ், நேதன் கூல்டர்-நைல், பற் கம்மின்ஸ், ஜேம்ஸ் போக்னர், ஆரோன் பின்ஞ், ஜோன் ஹேஸ்டிங்ஸ், ஜோஷ் ஹெசில்வூட், உஸ்மான் கவாஜா, நேதன் லையன், மிட்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், பீற்றர் நெவில், ஜேம்ஸ் பற்றின்சன், அடம் வொஜஸ், பீற்றர் சிடில், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வோணர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .