Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்த மூவரின் விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களது வேட்புமனுக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த எதிர்ப்பைத் தொடர்ந்தே, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கெதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
உப தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட கே. மதிவாணன், அசங்க செனவிரத்ன ஆகியோரது வேட்புமனுக்களும், பொருளாளர் பதவிக்காகப் போட்டியிட்ட ஈஸ்மான் நாரங்கொட ஆகியோரது வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
இப்பதவிகளுக்காகப் போட்டியிடுவதற்கு, நிறைவேற்றுச் செயற்குழுவில் குறைந்தது 2 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, இவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே, இவர்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேநிலைமையில் அர்ஜுன ரணதுங்க காணப்பட்ட போதிலும், இலங்கை சார்பாக டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியமை காரணமாக, யாப்பின்படி அவருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago