Editorial / 2021 நவம்பர் 21 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜெரம் சோலசானோ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (21) ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்த நிலையில், இலங்கை அணி வீரர் திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டத்தின் போது, ஜெரம் சோலசானோ காயமடைந்துள்ளார்.
அவருக்கு காலியில் ஸ்கேன் பரிசோதனைகள் நடத்தப்பட்டதை அடுத்து, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெரம் சோலசானோவின் உடல் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், அவருக்கு விளையாடுவதற்கான இயலுமை தற்போதைக்கு கிடையாதென அறியமுடிகின்றது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026