2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காயமடைந்துள்ள மத்தியூஸ் தென்னாபிரிக்கத் தொடரை தவறவிடுகிறாரா?

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கான இலங்கையின் சுற்றுப்பயணத்தில் அஞ்சலோ மத்தியூஸ் இருக்க மாட்டார் எனக் கருதப்படுகிறது.

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் பின்தொடைத்தசைநார் காயத்துக்குள்ளான நிலையிலேயே இச்சுற்றுப்பயணத்தை மத்தியூஸ் தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியூஸின் காயம் எவ்வளவு பாரதூரமானது என இன்னும் அறியப்படாத நிலையில், ஆரம்பகட்டத் தகவல்களின்படி தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ளவுள்ள இரண்டு டெஸ்ட்களை தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கும் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு மத்தியூஸால் திரும்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .